உள்நாடு

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.

Related posts

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

சஜித்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன் எம்.பி கோரிக்கை

editor

அனைத்து இரவு களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு