உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தினை குறைக்குமாறு இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் காலத்தினை 14 நாட்கள் முதல் 7 நாட்களாக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதனால் வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

Related posts

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்

லாஃப் எரிவாயு விலையிலும் மாற்றமா?