உள்நாடு

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டணபட்டியலுக்கும் அங்கீகாரம்!

நாடாளுமன்றத்தில் புதிய மின் மின்கட்டண பட்டியலுக்கு நேற்று (06) அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் இன்று (07.06.2024) இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்கட்டண பட்டியலானது, இலங்கை மின்சார சபையின் சேவைகளை செயல்திறன் மிக்கதாக மாற்ற வழி வகுக்கும்.

மேலும் அதன் தரம், சேவைகள், வெளிப்படைத்தன்மை, தனியார் பங்கேற்பு, முதலீடுகள் மற்றும் இறுதிப் பயனரின் செலவைக் குறைப்பதற்கான சீர்திருத்தங்களுக்கும் ஏதுவாக அமையும். அதேவேளை, இந்த புதிய பட்டியலை நிறைவேற்றுவதற்கு ஆலோசனை, ஊக்கம் மற்றும் உதவி புரிந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்” என கூறியுள்ளார்.

Related posts

கடந்த 48 மணித்தியாலங்களில் 30 பேர் பலி

சோளத்திற்கு விலை நிர்ணயம்

புதனன்று ரணில் பதவியேற்பு