உள்நாடு

நள்ளிரவு எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகளின் திருத்தமானது இறுதியாகக் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 371 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், டீசல் லீற்றர் ஒன்று 363 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kesari

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை குறைப்பு.

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை