உள்நாடு

நளின் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும், அவரது மனைவியும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவராக அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில், இன்றைய தினம் அவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

Related posts

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டுக்கு

50 சத வீதத்தை தாண்டிய வாக்குப் பதிவு

editor

ஒரு வாரத்திற்கான எரிபொருள் கையிருப்பில் உள்ளது