விளையாட்டு

நமீபியாவிற்கு குவியும் பல பாராட்டுக்கள்

(UTV |  மெல்போர்ன்) – 2022 டி20 உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான இலங்கையை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நமீபியா கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நமீபியாவின் ஆட்டம் மற்றும் இலங்கையின் தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துகளையும் அறிக்கைகளையும் ஊடகங்களில் தெரிவித்திருந்தனர்.

நமீபியாவிடம் இலங்கை அணி தோற்றதற்கு பதிலளித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, “இது ஏமாற்றமளிக்கும் முடிவு. எனினும், இந்த அணி முன்பு தோல்வியில் இருந்து மீண்டுள்ளது. இனி ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம். தகுதி பெறுவதே முதல் இலக்கு” என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு போட்டியைக் கணித்த மிக்கி ஆர்தர், இப்போதும் எந்த மாற்றமும் செய்யாமல் தனது கணிப்பில் நிற்பதாகக் கூறுகிறார்.

Related posts

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் ‘சாம்பியன்’

ஒசாகா அதிர்ச்சி தோல்வி

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு