கேளிக்கை

நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமண திகதி அறிவிப்பு

(UTV|INDIA)-ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட பத்மாவத் படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் =திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 திகதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தமன்னாவை மிஞ்சிய காஜல்

ஹரிஷ் கல்யாண் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !