கிசு கிசு

நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?

தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ட்விட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமா தான். மேலும் அனுபமா பும்ராவின் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்கிறார்.

பதிலுக்கு பும்ரா அனுபமா பரமேஸ்வரனின் ட்வீட்டுகளை லைக் செய்கிறார். இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அனுபமாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கும், பும்ராவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பிறந்ததுமே 11 ஆயிரம் டொலர்களை பரிசாகப்பெற்ற அதிஷ்டக் குழந்தை…!

தனி மரம் தோப்பாகாது : வாசுதேவ இன்று தீர்மானம்

சட்டை ஊசியுடன் கூடிய பணிசை கொள்வனவு செய்த பெண்…