கேளிக்கை

நடிகர் விஷால் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

(UTV|INDIA)-நடிகரும், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது திருமணம் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவை விஷால் திருமணம் செய்யவிருப்பதாகவும், விரைவில் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், அன்றே திருமண திகதியை இருவீட்டார் முடிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடையவுள்ள நிலையில் விஷாலின் திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

 

 

 

 

 

Related posts

பயிற்சி எடுத்த பிறகே நடிகர்கள் பாட வேண்டும்

அபர்ணதிக்கு ஆர்யா செய்த ஸ்பெஷல்

ஏ.ஆர். ரகுமான் இசையில் அனுஷ்காவின் நடிப்பு…