கேளிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

(UTV | இந்தியா) –  நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜோதிகாவின் அடுத்த படம் ராட்சசி…

படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்