கேளிக்கை

நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி

(UTV | இந்தியா) – நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து முறைப்பாடு மனு அளித்திருந்தார். அதில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா 40 லட்சம் ரூபாய் சம்பள மீதி வைத்திருந்ததாகவும், அதனை கேட்டபோது நிலம் வாங்கி தருவதாக கூறி, மேலும் பணம் பெற்று மொத்தம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த முறைப்பாட்டின் மீது அடையாறு பொலிஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் Mrs Sri Lanka for Mrs World தெரிவுக்கு Uschi Perera [PHOTOS]

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்