விளையாட்டு

நடால் 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்தார்

(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் பெற்றார். ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார் நடால். நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் ரேங்கிங்கில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச்சும், இரண்டாம் இடத்தில் உள்ள நடாலும் மோதினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6 – 0, 6 – 2, 7 – 5 என்ற நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

Related posts

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்

களத்தடுப்பில் சொதப்பல் : ரோகித் சர்மா விளக்கம்