உலகம்

நசுங்கப்படும் ரஷ்யப் பொருளாதாரம்

(UTV | ரஷ்யா) – உலகின் பல நாடுகள் தற்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

ரஷ்யாவின் கடற்படைக் கப்பல்கள் தனது துறைமுகங்களுக்குள் நுழைய இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

இந்த தீர்மானம் நேற்று (28) எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் நிறுத்த கனடா முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கனடா ஆண்டுதோறும் வாங்கும் கச்சா எண்ணெயின் மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ரஷ்யா எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார அபாயங்களை எதிர்நோக்கவுள்ள நிலையில், ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு தடை விதித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஜப்பானில் அவரச நிலை நீக்கம்

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் வெற்றி – Oxford பல்கலைக்கழகம்

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!