வணிகம்

தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள விபரம்…

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளமாக 600 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அடிப்படை சம்பளத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் பெருந்தோட்ட சம்மேளனத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தோட்ட தொழிலாளர்களின் ஒருநாளுக்கான அடிப்படை சம்பளத்தினை 500 ரூபாவிலிருந்து 20 வீதத்தால் அதிகரித்து 600 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட சம்மேளனத்தின் தலைவர் சுனில் போஹொலியத்தவை மேற்கோள் காட்டி இந்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிலாளர்களின் அதிகபட்ட மொத்த சம்பளமாக 940 ரூபா வரை வழங்க பெருந்தோட்ட சம்மேளனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எகிறும் மரக்கறிகளின் விலைகள்

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது