சூடான செய்திகள் 1

தொழில்முனைவோருக்கான பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி

(UTVNEWS|COLOMBO) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் “தொழில் முனைவோர் விழிப்புணர்வு” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 02 திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உட்டபட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை

ஐந்து மாதக் குழந்தையுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேற்றம்