சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை

(UTV|COLOMBO)-தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

தபால் சேவை சங்கத்தினரின் பிரதிநிதிகளோடு கடந்த முதலாம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், தபால் அமைச்சோ, தபால் திணைக்களமோ தனித்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் போது, அமைச்சரவை ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சூழ்நிலையில் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்