உள்நாடு

தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்

(UTV | இறம்பொடை) – இறம்பொடை- வெவன்டனில் அமைந்துள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்விக இல்லத்தில் இன்று(18) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விடுதியின் கூரைப் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் உபகரணங்கள் சிலவும் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு!

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை