உள்நாடு

தொடர்ந்தும் பாடசாலைகள் மூடும் நிலை

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜுலை 10ஆம் திகதிக்கு பின்னரும் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன, அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களினால் பாடசாலை மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும், எதிர்வரும் ஜுலை மாதம் 22ஆம் திகதி வரை எரிபொருள் நாட்டிற்கு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதத்தில் பாடசாலைகள் மூடப்படலாம் என்றும், பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளால் கல்வி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி