சூடான செய்திகள் 1வணிகம்

தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் தேயிலை விலை…

(UTV|COLOMBO)-இலங்கைத் தேயிலையின் விலை தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக தேயிலை தரகர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

2017ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் 610 ரூபா 28 சதமாக நிலவிய தேயிலையின் விலை, நேற்று 536 ரூபா 69 சதமாக பதிவாகி இருகிறது.

இது 11 சதவீத விலை வீழ்ச்சியாகும்.

அதேநேரம் தேயிலை ஏற்றுமதி பெறுமதி 7 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்தக் காலப்பகுதியில் 63 பில்லியன் ரூபாய் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டபோதும், இந்த முறை 58.7 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஏற்றுமதியே இடம்பெற்றிருப்பதாகவும் தேயிலைத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

Mandarina Colombo அறிமுகப்படுத்தும் நெலும் கொலே

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்