வகைப்படுத்தப்படாத

தொடரூந்தில் மோதி கிராமசேவகர் பரிதாபமாக பலி!

(UDHAYAM, COLOMBO) – மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா கடுகதி தொடரூந்தில் மோதி உந்துருளி செலுத்துனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 43 வயதான கஹவ பிரதேசத்தில் கிரமசேவகராக சேவையாற்றி வந்த ரோஹன இந்திக என தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொட – வேனமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, உந்துருளி சுமார் 500 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் போது தொடரூந்து பாதுகாப்பு கடவை திறந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கடவையில் பணிபுரியும் நபர், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு இருக்கவில்லை   என எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

හම්බන්තොට නගරයේදී පුද්ගලයෙක් ඝාතනය කෙරේ

බීමත් රියදුරන් 177 දෙනෙකු අත්අඩංගුවට

Kalagedihena Attack: Eight including math tutor further remanded