உள்நாடு

தொடரும் நில அதிர்வுகள்; கம்பளை பிரதேசத்தில் நில அதிர்வு

(UTV | கொழும்பு) –  தொடரும் நில அதிர்வுகள்; கம்பளை பிரதேசத்தில் நில அதிர்வு

நேற்று (05) இரவு கம்பளை பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.49 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நில அதிர்வுகளே ஏற்பட்டதாகவும்,
இந்த நில அதிர்வு மஹாகனதரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

புபுரஸ்ஸ பிரதேசம் இதன் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2665 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கைது

‘பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்க விடமாட்டோம்’