விளையாட்டு

தொடரிலிருந்து விலகிய பெப் டு பிளசிஸ்

(UTV|COLOMBO)-தென்னாபிரிக்க அணித்தலைவரான பெப் டு பிளசிஸ் உபாதைக்குள்ளாகியுள்ள காரணத்தினால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கண்டி பல்லேகலையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெப் டு பிளசிஸ் உபாதைக்குள்ளானார்.

பெப் டு பிளஸிற்கு ஏற்பட்டுள்ள உபாதை முழுமையாக குணமடைவதற்கு 6 வாரங்கள் செல்லலாம் என தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவர், இலங்கை அணிக்கு எதிராக எஞ்சியுள்ள 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணித்தலைவர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 – 0 என கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.

கண்டி பல்லேகலையில் பகலிரவு ஆட்டமாக இந்தப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முத்தையா வெளியேறினார்

ரஷ்யாவும் குரோஷியாவும்; காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு

ICC ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : முதலிடம் பிடித்த வீரர்