கேளிக்கை

தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா

91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும்.

அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இந்நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இயக்குநர் முடிவு?

tiktok இல் குதுகலமாக இருக்கும் திரிஷா(VIDEO)

சுஷாந்த் சிங் மரணம் – தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு அழைப்பாணை