உள்நாடு

தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடபெற்ற முக்கிய கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கும். அதன் பின்னர் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக தாம் களமிறங்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது மக்கள் சந்திப்பை இம்மாத நடுப்பகுதியில் காலியில் நடத்தவும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

பாடசாலை பைககளை நன்கொடையாக வழங்கியது சீனா

editor