அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வேண்டுகோள்.

பொதுப் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்படும் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரை உத்தியோகபூர்வமற்ற முறையில் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களையும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்கள் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Related posts

ரிஷாதின் அரசியல் கைதும் உள்ளது உள்ளபடியும் – மனோ

முன்னாள் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய IMF பிரதிநிதிகள்

editor

போதைபொருட்களுடன் நால்வர் கைது