உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்து தேர்தல் ஆணைக்குழுவினால், வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளித்து அதனை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சரித குணரத்னவினால் குறித்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரதிவாதிகளாக தேர்தல் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி என் ஜே. அபேசேகர, பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பிபி ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாற்றம் அடைகிறது

மீனவர் சடலமாக மீட்பு