அரசியல்

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து – சி. வி. விக்னேஸ்வரன்

(UTV | கொழும்பு) –

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கம் அமைப்பது நாட்டுக்கு நல்லது ஆனால் தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்தில் இணைவது பொருத்தமானதல்ல, தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய தேசிய அரசாங்கத்தை தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

அத்தோடு இப்போது தேர்தல் நடைபெற்றால் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெற முடியாது, பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும். ஆனால் தற்பொழுது தேர்தல் நடைபெற்று குறுகிய காலத்தில் ஆட்சி மாறினால் பாரிய பிரச்சனை ஏற்படும்.

இந்த நாட்டில் இன்னொரு பிரச்சனை ஏற்பட்டால், நாட்டை மீட்க முடியாது.

மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும் ஆகவே தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல்!

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

editor