உள்நாடு

தேர்தலை கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாங்கள் – மஹிந்த

(UTV | கொழும்பு) –  தேர்தலை கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாங்கள் – மஹிந்த

அநுராதபுரம் விகாரைக்கு நேற்று (27) விஜயம் செய்த போது, தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்ல, நாட்டில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜயர சிறி மகா போதியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அதமஸ்தானாதிபதி பூஜ்ய பல்லேகம ஹேமரதன தேரரையும் பார்வையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ருவன்வெலி மகாசாயாவை வழிபட்ட மகிந்த, ருவன்வெலி சைத்தியராமதிகாரி ஈதல்வெதுனுவே ஞானதிலக தேரரையும் தரிசித்துள்ளார்.

இதன்போது தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமது கட்சி பலமாக இருக்கின்றது. தேர்தலைக் கண்டு அஞ்சி ஓடும் கூட்டத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அல்லர் என்று கூறியுள்ளார்.

தமக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்ற பின்னர் தேர்தலுக்குத் தாம் ஏன் பயப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

நாலக கலுவேவ இராஜினாமா

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!