உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை இன்று (19) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதியரசர்கள் புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (19) மேற்கொண்டிருந்தனர்.

Related posts

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

editor

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி