உள்நாடு

தேர்தலில் மொட்டும் யானையும் சேர்ந்து போட்டியிடுமா?

(UTV | கொழும்பு) –  தேர்தலில் மொட்டும் யானையும் சேர்ந்து போட்டியிடுமா?
(SLPP) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டம், பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், வஜிர அபேவர்தன தலைமையிலான (UNP) ஐக்கிய தேசிய கட்சியும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜொன்ச்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட ஆறு பேர் பங்குபற்றியுள்ளதாகவும்,

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’

பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றவும்

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று