வணிகம்

தேயிலை ஏற்றுமதியில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகரித்திருப்பதாக போப்ஸ் மற்றும் வோல்க்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் 22 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 இலட்சம் கிலோ கிராமால் இந்த ஏற்றுமதி அதிகரித்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் துருக்கிக்கே கூடுதலாக தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் கூடுதலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் சிறந்த முதல் மூன்று நிறுவனங்களுக்குள் மீண்டுமொருமுறை இடம்பிடித்த HNB

பால்மா விவகாரம் – உண்மைகளை கண்டறிய உத்தரவு

ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார்