அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்த முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டடி பகுதியில் நேற்று (26 ) இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தினை நிறுத்தி விட்டு , தேசிய மக்கள் சக்தியினரை வெளியேற கோரிய நபரை, கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன.

குறித்த பிரச்சார கூட்டத்தில் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பிரதீபன்

Related posts

 srilankan airlines இன் 42 விமானிகள் இராஜினாமா

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வௌியிட்ட இலங்கை மின்சார சபை

editor