அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி எம்.பி நிலந்திக்கு எதிரான அவதூறு பதிவு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான பதிவை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியின் தொலைபேசி எண்ணை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.

குறித்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் வசமிருந்த கையடக்கத் தொலைபேசியை பெற்று அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருவதற்கு அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தொடர்புடைய கையடக்கத் தொலைபேசியை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோர உத்தரவிட்டது.

பின்னர், வழக்கு விசாரணைகளை ஜூலை 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

மீண்டும் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை

மதுவரித்திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு