வணிகம்

தேசிய பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம்

(UTV|COLOMBO) தேசிய பெரிய வெங்காய செய்கையாளர்களின் விளைச்சல்களுக்கு அதிக விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பெரிய வெங்காய இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், பெரிய வெங்காய செய்கையாளர்களிடமிருந்து அறுவடையை பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேற்படி உள்நாட்டு பெரிய வெங்காய அறுவடையின்போது அதனைப் பெற்று களஞ்சியப்படுத்தி பின்னர் அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்களின் நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி…

அரிசியின் விலைகளில் மாற்றம்

தென்னங் காணிகளை மறுசீரமைக்கும் வேலைத் திட்டம்