உள்நாடு

தேசிய பாடசாலை அதிபர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் போது, விண்ணப்பதாரரிடமிருந்து ஏதேனும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்கும் போது நேர்முகத்தேர்வுகள் அல்லது அதன் பின்னரான தேர்வுகளின் போது பொது சேவை ஆணைக்குழுவிற்கோ அல்லது கல்விச்சேவை ஆணைக்குழுவிற்கோ அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலேயே ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று கூடியது

தேர்தல் பாதுகாப்பு – 69,000 பொலிஸார் கடமைகளில்

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]