வகைப்படுத்தப்படாத

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று

(UTV|COLOMBO)-தேசத்தின் பிள்ளைகளை என்றும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை வழங்கும் சுரக்ஷா காப்புறுதி தேசிய நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தின்மூலம் மாணவர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு ஆகக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான காப்பீட்டு வசதிகளை பெறுகின்றார். இதனை கல்வி அமைச்சும், காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், பாடசாலை சமூகத்திற்கு மத்தியிலும் விளக்கம் அளிக்க இன்றுதொடக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 45 லட்சம் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Malinga to retire after 1st ODI vs. Bangladesh

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27

சொந்த இடங்களுக்கு சென்றவர்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள்