உள்நாடு

தேசிய சபை மீதான விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கான பிரேரணை மீதான விவாதம் இன்று (20) நடைபெறவுள்ளது.

இந்த முன்மொழிவு ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும், அது விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படும்.

பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதுடன் வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தேசிய சபை மீதான விவாதம் ஆரம்பமாகி மாலை 5.30 மணி வரை நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் பொது காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் இது அமுல்படுத்தப்படும் எனவும், கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் நிலைமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜன்ட் அண்மையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிடம் சமர்ப்பித்திருந்தார்.

Related posts

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ இலங்கைக்கு விஜயம்!

மின்னணு ஊடகம் மற்றும் இணைய ஊடகவியலாளர்களுக்கான ஊதியக்குழு

சிங்கள மக்களின் வாக்குகளுடன் மாத்திரம் வெற்றிபெறுவதற்கு விரும்பவில்லை – அனுர