விளையாட்டு

தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் அனிட்டா ஜெயதீஸ்வரன் சாதனை

(UTV|COLOMBO)-கொழும்பு சுகதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிட்டா ஜெயதீஸ்வரன் இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

 

இவர் கோலுன்றிப் பாய்தல் போட்டியில் மூன்று தசம் ஐந்து-ஐந்து மீற்றர் உயரத்தை பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார்.

 

கம்பஹா மாவட்ட வீரர் ர்.னு.ரு. பெரேரா 23 வயத்திற்கு உட்பட்டவர்களுக்கான உயரம் பாய்தலில் சாதனை நிலைநாட்டினார்.

 

பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரியை சேர்ந்த இருஷ ஹஷேன் என்ற வீரர் ஏழு மீற்றருக்கு மேலான தூரத்தை பாய்ந்து சாதனை நிலை நாட்டினார்.

 

கொழும்பு பிஷப் கல்லூரி மாணவி ஒவினி சந்திரசேகர குண்டு எறிதல் போட்டியில் 11 தசம் ஒன்பது மீற்றர் தூரத்திற்கு வீசி புதிய சாதனையை நிலைநாட்டினார்.

 

பம்பலப்பிட்டி சென் பீற்றர்ஸ் கல்லூரி மாணவன் ஒமேஷ் தரங்க வட்டு எறிதல் போட்டியில் 55 தசம் மூன்று-நான்கு மீற்றர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘என்னுடைய கடைசி உலகக் கிண்ணம் இது’ – லயோனல் மெஸ்ஸி

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

21ஆவது பொதுநலவாய விளையாட்டுப்போட்டி நாளை ஆரம்பம்