உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டி

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் பாராளுமன்றத்  தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை மூலமாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நம்பி செயற்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலேயே, தான் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

கபில அமரகோன் உயிரிழப்பு…