சூடான செய்திகள் 1

தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு – ஜனாதிபதி ஆணைக்குழு

(UTV|COLOMBO) தேசிய இரத்த வங்கிக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதற்கட்ட விசாரணைகளுக்காக, இரத்த வங்கியின் பொறியியலாளர் சுதீர சத்துரங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து, 283 இரத்த வங்கிகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் அங்கு கடமையாற்றிய பதில் பணிப்பாளர், டொக்டர் ருக்ஸான் பெல்லனவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேரின் வழக்கு ஒத்திவைப்பு

விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள் விரைந்து விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மல்வானை காணி கொள்வனவு விவகார வழக்கு ஒத்திவைப்பு…