உள்நாடு

தேசபந்து தென்னகோனின் பிணைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கிய முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (10) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தனிப்பட்ட சரீரப் பிணைகளின் பேரில் பிணை வழங்கினார்.

மேலும், சந்தேக நபர் சாட்சிகளின் விடயத்தில் தலையிடக் கூடாது என்றும் அத்தகைய நடவடிக்கைகள் பிணையை இரத்துச் செய்ய வழிவகுக்கும் என்றும் நீதிவான் கடுமையாக எச்சரித்தார்.

பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சசீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

Related posts

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை