சூடான செய்திகள் 1

தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழ்

(UTV|COLOMBO) தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் சான்றிதழை விநியோகிக்க தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை மேற்கொள்வதாக அதிகார சபையின் தலைவர் உதய ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு அமைய தரமான தேங்காய் எண்ணெய்க்காக லேபிள் ஒட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, அசுத்தமான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யும் இடங்கள் தொடர்பில் 0112 50 25 01 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்த 60 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி