சூடான செய்திகள் 1

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

(UTVNEWS | COLOMBO) – தெஹிவளையிலிருந்து கல்கிசை வரையான கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய் படர்ந்துள்ளமையை காணமுடிகின்றது.

இது தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரியொருவரான, டர்னி பிரதீப் கருத்து தெரிவிக்கையில், ஏதேனும் கப்பலொன்றிலிருந்து அனுமதியின்றி கடலுக்கு எண்ணெய் விடுவிக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து தேடுதல் நடவடிக்கைகளும், விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதனை தொடர்ந்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு சபைக்குச் சொந்தமான கப்பல்கள் சில, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஓரின சேர்க்கையால் ஏற்பட்டுள்ள மோதல்

2018 தொலைக்காட்சி, கலை அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்…

சொந்த சகோதரியை வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த ஒருவர் கைது