உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிய வீதியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இன்று (21) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு திசை நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி பின்னால் வந்த மற்றுமொரு காருடன் மோதியுள்ளது.

காயமடைந்தவர்களில் 13 வயது குழந்தையும் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சிகிச்சைக்காக பத்தேகம மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் கதிர்காமத்திலிருந்து வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

பிரதி சபாநாயகாரின் இராஜினாமா ஜனாதிபதியால் நிராகரிப்பு

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்!