விளையாட்டு

தென்னாபிரிக்க அணி வெற்றி

(UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்காவில் நேற்றிரவு இடம்பெற்ற, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

“நான் எப்போதுமே எனக்கு கெப்டனாகவே இருக்கிறேன்”

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் புதிய கருத்து

இலங்கை அணிக்கு திரில் வெற்றி [VIDEO]