உள்நாடு

தென்கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை சாரணர்கள் !

(UTV | கொழும்பு) –  நாட்டிலிருந்து 176 சாரணர்கள் உலக சாரணர் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக தென்கொரியாவை சென்றடைந்த நிலையில் இன்று அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள வெப்ப மண்டல புயல் காரணமாக இவ்வாறு சாரணர்கள் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் , குறித்த 176 இலங்கை சாரணர்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி, தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் உதவியுடன் குறித்த சாரணர்களினது பாதுகாப்பு மற்றும் உடல் நலம் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அந்நிகழ்வில் பங்கேற்றிருந்த மேலும் ஆயிரக்கணக்கான சாரணர்கள் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நீரோடைக்குள் தவறி வீழ்ந்து 4 வயது சிறுமி பலி – புத்தளத்தில் சோகம்

editor

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி நுவன் போப்பகே நீதிமன்றில் ஆஜர்