சூடான செய்திகள் 1

தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் உயிரிழப்பு; பாதுகாப்பில் இராணுவத்தினர்

(UTVNEWS|COLOMBO) – தென்கிழக்குப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர் ஒருவர் இன்று காலை மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தன்சில்வத்த, பூண்டுலோயாவைச் சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இன்று அதிகாலையில் பல்கலைக்கழகத்தில் மயக்கமுற்ற நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டதனை அவரது சக பீட மாணவர்கள் அவதானித்துள்ளனர்.

பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான தகவல் எதனையும் ஊடகங்களுக்கு வழங்கப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழத்திற்கு ஊடகவியலாளர்கள், வெளியார் எவரும் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், நுளை வாயலில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கல்வி அமைச்சு விடுத்த புதிய அறிவிப்பு!

இதுவரை 2,103 பேர் முழுவதுமாக குணம்

கடும் வாகன நெரிசல்…