உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!

கே எ ஹமீட்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வரங்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14. 5. 2024 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

எனினும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குறித்த சர்வதேச ஆய்வரங்கை திட்டமிட்ட திகதியன்று நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் குறித்த ஆய்வரங்கானது மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளது.

இருப்பினும் கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் ஆய்வரங்கு நடைபெறும் புதிய திகதி அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச ஆய்வரங்க குழு
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் இலங்கை தென்கிழக்கு

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம்

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு

ஐ.நா.  அறிக்கையை இலங்கை நிராகரித்தது