விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

(UTV| தென் ஆப்பிரிக்கா ) – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டீ – 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டீ – 20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டீ – 20 தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.

Related posts

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்

என்னை வீழ்த்த தமிழனுக்கே முடியும்

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்