அரசியல்சூடான செய்திகள் 1

துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற AI தொடர்பான உலகளாவிய கருத்தரங்கில் சாணக்கியன் எம்.பி

கடந்த வாரத்தில் துருக்கி இஸ்தான்புல்லில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு AI சம்பந்தமான ஓர் உலகளாவிய கருத்தரங்கில் பங்குபற்றியிருந்தேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்….

(இது கணினிகள் மற்றும் மென்பொருட்கள் மனிதர்களைப் போல சிந்திக்க, முடிவுகள் எடுக்க, பிரச்சினைகளை தீர்க்க, மற்றும் கற்றுக்கொள்ள உதவும் தொழில்நுட்பம் ஆகும்).

இவ் செயலமர்வில் முக்கியமாக மூன்று விடையங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது அதில் முதலாவது தேர்தல் காலங்களிலும் தேர்தல்களின் போதும் AI இனது சாதக பாதக தாக்கங்கள் பற்றியும்.

மற்றும் AI இணைப் பயன்படுத்தி எவ்வாறு நாம் கட்சியினது தேர்தல் பிரச்சாரங்கள் மேற்க் கொள்ளலாம் என்றும், எமக்கு எதிரான AI மூலமான பிரச்சாரங்களை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியுமாக இருந்தது.

இரண்டாவது விடையம் பாராளுமன்றம் தொடர்பான நீண்ட மற்றும் குறுகிய உரைகள் மற்றும் அதனை எவ்வாறு சுருக்கமாக முக்கிய கருத்துக்களை மாத்திரம் சுருக்கி எடுப்பது என்பது தொடர்பாகவும், அரசியல் சாசனம், மற்றும் எமக்கான வரி அதிகரிப்பது சம்பந்தமான விடையங்கள் மற்றும் அதனுடன் கூடிய ஆராய்ச்சி சம்பந்தமான விடயங்களை எவ்வாறு AI தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கையாளலாம் என்பது தொடர்பாகவும் அமைந்தது.

மூன்றாவது விடையம் AI இனை பயன்படுத்தி எவ்வாறு எமது கட்சி கொள்கைகளை மற்றும் நடவடிக்கைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கலாம் என்பது பற்றியும் மற்றும் உறுப்பினர் தொடர்பான தகவல்களை வினைத்திறனாக எவ்வாறு ஓர் தகவல் திரட்டாக கையாளலாம் என்பது தொடர்பாகவும் அமைந்தது.

தவிக்கமுடியாது தொடர்ந்து ஓர் கிழமையாக நடைபெற்ற இவ் கருத்தரங்கானது முதல் சில நாட்கள் Cyber Security கணிணி மூலம் நடக்கும் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அமைந்திருந்தது இதன்போது பல நாடுகளை சேர்ந்த அரச Cyber Security யுடன் தொடர்புடைய பலர் கலந்து கொண்டிருந்தார்கள். வழங்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய அவர்களின் பாதுகாப்பு கருதி ஒவ்வெரு நாளும் என்னால் படங்களை வெளியிட முடியவில்லை.

அதிகார பகிர்வு மூலம் கிடைக்கப்பெறும் தமிழருக்கான அதிகாரங்களை வைத்துக்கொண்டு நாம் எவ்வாறு எமது வட கிழக்கினை இவ் புதிய AI தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை எவ்வாறு வினைத்திறனாக வழங்கலாம் என்பது போன்ற செயல் திட்டங்களுக்கு இவ்வாறான செயலமர்வுகளானது மிகவும் அத்தியாவசிய ஒன்றாக காணப்படுகின்றது.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – ரிஷாத் பதியுதீன்

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு

பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor